இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஏற்பட்ட நெருக்கடி: ஐசிசியிடம் முறைப்பாடு
ரி20 (T20) உலகக் கிண்ணத் தொடரின் குழுநிலைப் போட்டிகளின் போது சிறிலங்கா அணி எதிர்கொண்ட நீண்ட பயண நேரங்கள் மற்றும் இன்னல்கள் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையில் (ICC) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
சிறிலங்கா விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) இன்று (07) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அணியின் வசதிகள் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக அமெரிக்கா சென்ற சிறிலங்கா கிரிக்கெட் (SLC) பிரதிநிதியிடம் தனியான விசாரணை நடத்தப்படும்.
தொழில்நுட்பக் கோளாறு
இலங்கை (Sri Lanka) , அயர்லாந்து (Ireland) மற்றும் தென்னாப்பிரிக்கா (South Africa) கிரிக்கெட் அணிகள் தங்களது விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான நிலையத்தில் ஏழு மணி நேரம் சிக்கித் தவித்தன.
இந்த சம்பவம் தொடர்பாக சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் ஐசிசியிடம் புகார் அளித்துள்ளது. ஒவ்வொரு நாடும் வெவ்வேறாக நடத்தப்படுகின்றன பங்களாதேஸ் (Bangladesh) அணி அதிக கிலோமீட்டர் பயணத்தை மேற்கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து சிறிலங்கா அணி உள்ளது.
அமெரிக்க கிரிக்கெட் சங்கம்
அமெரிக்க கிரிக்கெட் சங்கம் தற்போது ஐசிசியால் தடைசெய்யப்பட்டுள்ளது, இருப்பினும் ஐசிசி இந்த போட்டியை அமெரிக்காவில் (America) நடத்துகிறது" என்று விளையாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது, ஐசிசியின் (ICC) அநீதிகளுக்கு எதிராக நாடு எழுந்து நிற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |