இலங்கையில் மீண்டும் தீவிரமடையும் கோவிட் தொற்று - இருவர் மரணம்!
இலங்கையில் மீண்டும் கோவிட் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதுடன், கடந்த இரண்டு நாட்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதனை, கொலன்னாவ மரண விசாரணை அதிகாரி காஞ்சனா விஜேநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.
மாத்தறை ஹமந்துவ பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய பெண் மற்றும் யட்டியந்தோட்டை பனாவத்தையில் வசிக்கும் 73 வயதுடைய ஆண் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இருவர் மரணம்
உயிரிழந்த பெண் கடந்த 27ஆம் திகதி கொழும்பு IDH மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மறுநாள் வெள்ளிக்கிழமை (28) உயிரிழந்துள்ளார்.
மற்றையவர் 28ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்றையதினம் (29) உயிரிழந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
கோவிட் தொற்று
கொவிட் தொற்று மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளதால் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும், முகக்கவசத்தை அணியுமாறும் சுகாதார அமைச்சு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
அதேசமயம், கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளர்கள் IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
