மேலும் 204 கொவிட் மரணங்கள் பதிவு
corona
death
sri-lanka
By Vanan
இலங்கையில்,நேற்றைய தினத்தில் மாத்திரம் மேலும் 204 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரது எண்ணிக்கை 9,604 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இன்று 3,619 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 447,749 ஆக அதிகரித்துள்ளது.