எகிறும் புதுவருட கொவிட் கொத்தணி - மேலும் 1,304 பேருக்கு தொற்றுறுதி
covid
sri lanka
patient
By Vanan
இலங்கையில் மேலும் 1,304 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 109,450 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 95,975 பேர் பூரணமாக குணமடைந்துள்ளடன், கொரோனா தொற்றுக்குள்ளான 678 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்