இதே நிலைமை நீடித்தால் 10 ஆயிரம் பேர் பலியாவார்கள் - இலங்கை மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை
covid
sri lanka
death
By Vanan
நாட்டில் தற்போது காணப்படும் கொரோனா அச்சுறுத்தல் நிலைமையானது தொடர்ந்து நீடித்தால் மாதமொன்றுக்கு 10 ஆயிரம் பேர் உயிரிழக்கும் அவலநிலை ஏற்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்தியக் குழு உறுப்பினரும் ஊடகக்குழு உறுப்பினருமான வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் எச்சரித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பேசிய அவர், நாட்டில் தற்போது பதிவாகும் கொரோனா மரண வீதமானது இந்தியாவை விட ஐந்து வீதத்தால் அதிகரித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பெயரளவில் மாத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கில் 90 சதவீதமான மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தால் மாத்திரமே கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டார்.