மேலும் 185 கொவிட் மரணங்கள் பதிவு
covid
sri lanka
death
patient
By Vanan
இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 185 பேர் நேற்று (07) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர், அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,689 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்று இதுவரையில் 2,915 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் நாட்டில் பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 474,780 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 389,969 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.