மேலும் 132 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
covid
sri lanka
death
By Vanan
இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 132 பேர், நேற்றைய தினம் (14) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,699 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இதுவரை நாட்டில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 495,851 ஆக அதிகரித்துள்ளதுடன்,
தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 427,254 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.