இலங்கையில் மேலும் 103 கொவிட் மரணங்கள் பதிவு
covid
sri lanka
death
By Vanan
இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நேற்றைய தினம் (18) கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 103 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த உயிரிழப்புக்களுடன், நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 12,125ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் உயிரிழந்தோரில் 56 ஆண்களும், 47 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.