கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
covid
sri lanka
death
By Vanan
கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 59 பேர் நேற்றைய தினம் (29) உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 12,906 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்று இதுவரை நாட்டில் மேலும் 734 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 517,199 ஆக அதிகரித்துள்ளது.