கொவிட் மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக குறைவு
covid
sri lanka
death
By Vanan
இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 29 பேர் நேற்றைய தினம் (08) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,296 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்று உறுதியான மேலும் 542 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 525,479 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.