கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
covid
sri lanka
death
By Vanan
இலங்கையில் நேற்றைய தினம் 14 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,654 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று உயிரிழந்தவர்களில் 05 பெண்களும் 09 ஆண்களும் உள்ளடங்குவதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்று உறுதியான மேலும் 440 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 537,085 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.