மேலும் 21 கொவிட் மரணங்கள் பதிவு
covid
sri lanka
death
By Vanan
இலங்கையில் மேலும் 21 கொவிட் மரணங்கள் நேற்று(03) பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,440ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 04 பெண்களும் 17 ஆண்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்று உறுதியான மேலும் 541 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 566,737 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 10, 287 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஏனையோர் வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்