புலம்பெயர் உறவுகள் நாடு திரும்புவது எப்போது? ஸ்ரீலங்காவின் நிலைப்பாடு
இன்று ஸ்ரீலங்காவில் வெளிநாட்டிலிருந்து ஊழியர்களையும் சுற்றுலா பயணிகளையும் நாட்டுக்கு அழைக்கும் போது ஒரு விமான பயணத்திற்கான பரிந்துரை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ஒரு விமான பயணத்தின் போது 75 பேர் பயணிக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. எனினும் இதற்கு ஏற்ப சரியான முறையில் இயங்க தவறியமையினால் புதிய திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விமானத்தின் ஆசனம் 200 ஆக இருக்குமானால் அவற்றில் 75 பேர் தனிமைப்படுத்தல் முறைக்கமைய நாட்டுக்கு வர வேண்டும் என்றும், ஏனைய 125 பேர் சுற்றுலா பயணிகளாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் குறித்த திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது கொரொனா பெருந்தொற்று அதிகரித்துள்ள நிலையில் வெளிநாட்டுப் பயணங்கள் எவ்வாறு உள்ளன என்பது தொடர்பில் ஆராய்கிறது இந்த ஒளியாவணம்,