மேலும் 4,221 பேருக்கு கொரோனா உறுதி
covid
sri lanka
patient
By Vanan
கொரோனா தொற்று உறுதியான மேலும் 4,221 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 440,302 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,164பேர் இன்று குணமடைந்துள்ளனர். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 374,156 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் நேற்றைய தினம் (30) கொரோனா தொற்றினால் 194 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9,185 ஆக அதிகரித்துள்ளது.