இன்றும் அதிகளவு கொவிட் தொற்றாளர்கள் பதிவு
covid
sri lanka
patient
By Vanan
இலங்கையில் மேலும் 3,828 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாட்டில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 444,130 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்று வெளிவந்த அறிக்கையின் படி, நேற்றைய தினத்தில் மாத்திரம் 215 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரது எண்ணிக்கை 9,400 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.