கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
covid
sri lanka
patient
By Vanan
இலங்கையில் இன்று (08) 679 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 545,935 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் (07) கொவிட் தொற்றால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,875 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 06 பெண்களும், 13 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.