சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டிருந்தால் சர்வதேசம் உதவியிருக்கும்..! மைத்திரி
சர்வகட்சி அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்குமானால், உலக நாடுகள் இலங்கைக்கு உதவும் என சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தற்போதைய பல பிரச்சினைகளுக்கு மத்தியில், நாட்டை ஜனநாயக ரீதியாக கொண்டு செல்வதே தற்போது தேவையாக உள்ளது. பசி, உணவின்மை, விவசாய பிரச்சினை, மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.
நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்

பல வைத்தியர்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். சுகாதாரதுறை பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளது. பணம் இன்மையால், மேலதிக வகுப்புக்களுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இவ்வாறான பல பிரச்சினைகள் காணப்படுகின்ற நிலையில், நாடு என்ற ரீதியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,