நெருக்கடியில் இலங்கை - பசில் வெளியிட்ட அறிவிப்பு
தற்போது நாடு எதிர்நோக்கும் பல முக்கிய பிரச்சினைகளுக்கு எதிர்வரும் காலங்களில் தீர்வு காணப்படும் எனவும் அதற்கான உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிளெக்ஸி கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை நேற்றையதினம் திறந்து வைத்துப் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
குறிப்பாக நாடு எதிர்நோக்கும் அந்நிய செலாவணியை ஈட்டும் பிரச்சினைக்கு இந்த புதிய நிறுவனம் முக்கியத்துவம் வாய்ந்தது என அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிறுவனம் தயாரிக்கும் மருத்துவ உபகரணங்களில் 90% ஏற்றுமதிக்காகத் தயாரிக்கப்படுவதால் அதிக அளவில் அந்நியச் செலாவணி கிடைக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும், இளைஞர்களின் வேலைவாய்ப்புப் பிரச்சினைக்கு இது ஒரு தீர்வாக அமையும் என்றும், எதிர்வரும் 25ஆம் திகதி உலகின் முன்னணி ஐடி நிறுவனம் இந்நாட்டில் நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் நாட்டிலுள்ள 2000 இளைஞர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பை வழங்க முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.