ரணிலுக்கு ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி: இலங்கையை புறக்கணிக்கும் உலக நாடுகள்
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவின் இலங்கை விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அரச உள்விவகார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் நிலையில் ஜப்பான் பிரதமர் ஒரு நாள் பயணமாக இலங்கை வருவதாக முதலில் திட்டமிட்டிருந்தார்.
எனினும் ஜப்பானிய பிரதமரின் இலங்கை விஜயம் இடைநிறுத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியிடப்படவில்லை.சமீப காலங்களில் அரச தலைவர் ஒருவர் வர திட்டமிட்டு பின்னர் வராமல் இருப்பது இது இரண்டாவது முறையாகும்.
சீனாவின் சர்ச்சைக்குரிய உளவு கப்பல் இலங்கையில் தரித்து நிற்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அயல் நாடுகளுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் விஜயம் தடைப்பட்டதையும் அரசியல் மட்டத் தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        