13ஐ நடைமுறைப்படுத்துவதில் அதிபர் உறுதியாக உள்ளார் : பாலித ரங்கே பண்டார
” இலங்கையில் காவல்துறை அதிகாரம் தவிர அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதியாக இருக்கின்றார்.” – என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
அரசியலமைமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் இந்திய பிரதமருடன் பேச்சு
”அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் இந்திய பிரதமருடன் அதிபர் பேச்சு நடத்தினார். 13ஐ நடைமுறைப்படுத்தும் விடயத்தில் அவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றார்.

13ஆவது திருத்தச்சட்டம் எமது அரசியலமைப்பில் உள்ள அங்கம், அதில் உள்ள காவல்துறை அதிகாரம் தொடர்பில் சர்ச்சை உள்ளது. அதை தவிர ஏனைய விடயங்களை நடைமுறைப்படுத்த அதிபர் உறுதியாக உள்ளார்.
இந்திய பிரதமரிடமும் இது தெரிவிக்கப்பட்டது. கொழும்பில் 13 இல்லை எனக்கூறிவிட்டு இந்தியா சென்று 13பிளஸ் என கூறும் நபர் எமது அதிபர் கிடையாது.
 
    
    உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் அரசில் இருப்பதால்தானா உண்மை வெளிவரவில்லை : சஜித் கேள்வி
அவர் முடியுமான விடயங்களை செய்கின்றார். மக்கள் பக்கம் நின்று முடிவுகளை எடுக்கின்றார். வடக்கு அபிவிருத்தி தொடர்பிலும் அவரிடம் விசேட திட்டம் உள்ளது.
இதேவேளை, அதிகாரப்பகிர்வுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே ஐக்கிய தேசியக்கட்சி உள்ளது” என ரங்கே பண்டார தெரிவித்தார்.
.
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        