இலங்கை சுங்கத்தின் சாதனை: வெளியான தகவல்
                                    
                    Sri Lanka
                
                                                
                    Economy of Sri Lanka
                
                                                
                    Sri Lanka Customs
                
                        
        
            
                
                By Shalini Balachandran
            
            
                
                
            
        
    இலங்கை சுங்கத்தால் இந்தாண்டு வசூலித்த வரி வருவாய் இரண்டு டிரில்லியன் ரூபாயை தாண்டியுள்ளது.
இதனடிப்படையில், 2025 ஆம் ஆண்டிற்கான 2.115 டிரில்லியன் ரூபாய் வருவாய் இலக்கை இலங்கை சுங்கம் நெருங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வரலாற்றில் அரசாங்க வரி வருவாயை வசூலிக்கும் திணைக்களம் ஒன்றால் ஒரே ஆண்டில் சேகரிக்கப்பட்ட அதிகபட்ச வருவாயாக சுங்கம் இந்த சாதனை வருவாயை படைத்துள்ளது.
திணைக்களம்
இந்த வருவாயில் மோட்டார் வாகனங்களிலிருந்து வசூலிக்கப்பட்ட 630 பில்லியன் ரூபாய் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஆண்டு இறுதிக்குள் வருவாய் இலக்கை விட கூடுதலாக 300 பில்லியன் ரூபாய் வசூலிக்க முடியும் என சுங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        