சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் சைபர் வன்முறைகள் : அறிமுகமாகவுள்ள புதிய முறைகள்
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கான இனப்பெருக்க சுகாதாரம், பாலியல் கல்வி மற்றும் சிறுவர்களுக்கு எதிரான இணைய வன்முறைகள் தொடர்பில் குழந்தைகளுக்கான நாடாளுமன்றக் குழு கவனம் செலுத்தியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தலைமையில் அண்மையில் கூடிய குழுக்கூட்டத்தில் போதே இந்த விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் பாலுறவுக் கல்வி தொடர்பான கல்வியை ஆரம்பமாக புதிய ஊடக முறைகள் மூலம் இணையம் மூலம் மேற்கொள்ளும் நோக்கத்தில் உள்ளதாக ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் உத்தியோகபூர்வமாக இந்த முயற்சிகளை ஆரம்பிக்க பேரவை விரும்புவதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
மேலும், குழந்தைகள் மத்தியில் போதைப்பொருள் பரவல் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
அனைத்துப் பள்ளிகளிலும் புகார் பெட்டி முறைமையை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான இணைய வன்முறை தொடர்பான தற்போதைய சூழல் மற்றும் சட்டங்களின் பயன்பாடு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இது தொடர்பாக மேலும் பல செய்திகளை இன்றைய மதிய நேர செய்தி தொகுப்பில் காண்க.