பற்றைக்குள் இருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம்!
பயாகல பகுதியில் ஆணில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலம் இன்று காலை மீட்கப்பட்டதாக களுத்துறை பயாகல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலத்தின் இடது கை மற்றும் மார்பில் காயங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
களுத்துறை, பயாகல தளுவத்த பிரகதி மாவத்தைக்கு அருகில் கடற்கரை பற்றை ஒன்றுக்கு அருகில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
திடீர் மரண விசாரணை அதிகாரி ரெஜினோல்ட் ஹெட்டியாராச்சி பரிசோதனைகளை மேற்கொண்டதுடன் கொலை என சந்தேகிப்பதாக கூறியுள்ளார்.
அத்துடன் நீதவான் விசாரணைகளை நடத்த வேண்டும் எனவும் அவர் காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பயாகல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
