நியூயோர்க் ஐ.நாவை ரணில் தவிர்ப்பதேன்..! பகிரங்கப்பட்ட காய்வெட்டல்
ஐ.நா பொதுச் சபை அமர்வு
ஐ.நா பொதுச் சபை அமர்வு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சிறிலங்காவினுடைய அதிபர் ரணில் விக்ரமசிங்க அந்த அமர்வைத் தவிர்ப்பதும் தனக்கு பதிலாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவை அனுப்புவதும் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏன் ரணில் விக்ரமசிங்க தனக்கு கிட்டிய ஒரு அருமையான வாய்ப்பை தவற விடுகிறார் என்பது குறித்த காரண காரியங்களும் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நகர்வுகளின் அடிப்படையில் செப்டம்பர் 21 ஆம் திகதி அதாவது எதிர்வரும் புதன்கிழமை என்று சிறிலங்காவுக்கு ஐ.நா பொதுச் சபை அரங்கில் வழங்கப்பட்ட நேரம் தற்போது பின்னகர்த்தப்பட்டிருக்கிறது.
அனைத்துலக பொறிமுறை
இதன் அடிப்படையில் எதிர்வரும் 24 ஆம் திகதி சனிக்கிழமை தான் இறுதிப்பேச்சாளர் பட்டியலில் சிறிலங்கா தள்ளப்பட்டு இருக்கிறது.
அமெரிக்க செனட்டர்கள் இலங்கையின் தற்போதைய நிலவரம் தொடர்பில் அனைத்துலக பொறிமுறைக்கு அழைப்பு விடுத்து, அதற்குரிய தீர்மானத்தை நகர்த்திய பின்னணியில் ரணிலின் இந்த நியூயோர்க் காய்வெட்டல் பகிரங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இவ்வாறான பகிரங்கப்படுத்தலுக்கான காரணம், சிறிலங்காவின் நிலைப்பாடு, ஜெனிவாவில் இந்திய ஒதுக்கம் போன்ற பல முக்கிய விடயங்களை ஆராய்கிறது இன்றைய செய்திவீச்சு,
