இலங்கையில் வேகமெடுக்கும் டெங்கு நோய்த்தொற்று
இந்த ஆண்டு (2023) பதிவான டெங்கு நோயாளர்களின் எணிக்கை 75,000 ஐத் தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
குறிப்பாக இந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் 27 ஆம் திகதி வரை மொத்தம் 75,377 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், நவம்பர் மாதத்தில் மாத்திரம் 6,884 வழக்குகள் பதிவாகியிருப்பதாகவும் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்
இந்த ஆண்டுக்கான (2023) மொத்த டெங்கு நோய்த்தொற்று வழக்குகளில் அதிகளாவான எண்ணிக்கையினைப் பதிவு செய்த மாகாணமாக மேல் மாகாணம் 35,553 வழக்குகளையும்,
15,953 வழக்குகளுடன் கொழும்பு மாவட்டம் அதிகளவான டெங்கு வழக்குகளைப் பதிவு செய்த மாவட்டமாகவும் விளங்குகின்றன.
மேலும், அதிகரித்து வரும் டெங்கு நோய்த்தாக்கத்தைத் தடுக்கும் வகையில், சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்திருக்குமாரும், நுளம்பு உற்பத்தியாகாதவாறு இடங்களைப் பாதுகாப்பாக பேணிக்கொள்ளுமாறும், சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் ..! |