போதைப்பொருளுக்கு அடிமையான தந்தையால் பரிதாப நிலையில் பெண் குழந்தை!
Mullaitivu
Sri Lanka
Jaffna Teaching Hospital
By Kalaimathy
உயிர்கொல்லி ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையான தந்தையால் 2 வயதுப் பெண் குழந்தை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கொக்கிளாயைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தை காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது.
குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குழந்தையின் உடலில் ஐஸ் போதைப்பொருள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
குழந்தையின் உடலில் போதைப்பொருள்
அத்துடன் குழந்தையின் தந்தை உயிர்க்கொல்லி ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்பதும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
குழந்தை வீட்டிலிருந்து போதைப்பொருளை விளையாட்டாக எடுத்து உட்கொண்டு இருக்கலாமென விசாரணைகளில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி