சொர்க்கபுரி தீவாக இலங்கையை மாற்ற நடவடிக்கை
sri lanka
people
drugs
priangi amarabandhu
By Vanan
போதைப் பாவனையற்ற சொர்க்கபுரித் தீவாக இலங்கையை மாற்றுவோம் என அபாயகர ஔடத அதிகார சபையின் தலைவர் டொக்டர் பிரியங்கி அமரபந்து தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 26ஆம் திகதி போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இவ்வாண்டு இத்தினத்தின் தொனிப்பொருள் 'போதைப்பொருள் தொடர்பான உண்மைகளை பகிர்வோம், உயிர் காப்போம்' என்பதாகும். இத்தினத்தில் கருத்து வெளியிட்ட அவர்,
வெளிக்களப் பிரிவிற்கு மேலதிகமாக சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு பிரிவு மற்றும் ஏனைய தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் பிரிவுகள் சேர்ந்து நாம் வாழும் இந்த நாட்டை விட்டு போதையை ஒழித்து, இச்சிறிய தீவை வாழக் கூடிய சொர்க்கபுரியாக மாற்ற முயற்சி செய்து வருகின்றது எனத் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி