ஈஸ்டர் ஞாயிறு விவகாரம்: ஹரீன் பெர்னாண்டோவின் விசாரணைகளை முடிக்குமாறு பணிப்புரை
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்த அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவுக்கு எதிரான விசாரணைகளை முடிக்குமாறு சட்டமா அதிபரால் காவல்துறையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பணிப்புரையானது சட்டமா அதிபாரால் இன்று(13) உச்ச நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சில காலங்களுக்கு முன்னர் ஹரின் பெர்னாண்டோ, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தம்மை கைது செய்வதை தடுக்கும் உத்தரவை கோரி அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி நல்லூர் கந்தன் : பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்பு (காணொளி)
பணிப்புரை
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறை விசேட புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக் கோப்புகளை ஆராய்ந்த சட்டமா அதிபர், ஜூன் மாதம் 20ஆம் திகதி ஹரின் பெர்னாண்டோ தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்யுமாறு பணிப்புரை வழங்கியதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
ஆனால் இந்த மனு தொடருமா இல்லையா என்பதை தீர்மானிக்கும் வகையில், எதிர்வரும் 18ஆம் திகதி அழைப்பதற்கும் நீதிமன்றம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.