தொழிற்றுறை வீழ்ச்சியை எவ்வாறு பொருளாதார மீட்சி என்பது:அனுரகுமார கேள்வி

Anura Kumara Dissanayaka Sri Lanka Economic Crisis Sri Lanka Economy of Sri Lanka
By Beulah Dec 14, 2023 12:22 AM GMT
Report

தவறான தீர்மானம் எடுத்தவர்களுக்கு பொருளாதார பாதிப்பு தாக்கம் செலுத்தவில்லை, நடுத்தர மக்களே உண்பதற்கு கூட உணவில்லாமல் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(13) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு  ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

தாயுடன் சென்ற மாணவி கடத்தப்பட்டார்

தாயுடன் சென்ற மாணவி கடத்தப்பட்டார்

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு

“மாய வித்தைகளால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிடுகிறார். ஆனால் அவர்கள் தான் மாய வித்தைகாரரை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு என்று குறிப்பிட்டுக் கொண்டு அழைத்து வந்தார்கள்.

தொழிற்றுறை வீழ்ச்சியை எவ்வாறு பொருளாதார மீட்சி என்பது:அனுரகுமார கேள்வி | Sri Lanka Economic Anura Kumara Dissanayake

பொருளாதார நெருக்கடிக்கு யார் காரணம் என்று இறந்த காலத்தை ஆராயமல், கடந்த காலத்தை மறக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். காலத்தை காரணம் காட்டி தப்பித்துக் கொள்ளும் தன்மையே தற்போது காணப்படுகிறது.

நாட்டு மக்களின் எதிர்காலத்தை கொள்ளையடித்து, அரச சொத்துக்களை மோசடி செய்து, தவறான பொருளாதார கொள்கை திட்டங்களை ஆட்சியாளர்கள் எடுக்கும் போது அதற்கு ஆதரவு வழங்கியவர்கள் கடந்த காலத்தை மறக்கலாம்.

ஆனால் நாட்டு மக்கள் அந்த கடந்த காலத்தை மறக்க கூடாது. 2002 ஆம் ஆண்டு முதல் தவறிழைத்துள்ளதாகவும், அதன் பிரதிபலனை தற்போது எதிர்கொள்வதாக அதிபர் குறிப்பிடுகிறார். ஆனால் தவறின் பிரதிபலனை தவறு செய்தவர்கள் எதிர்கொள்வதில்லை.

தற்போதைய பொருளாதார பாதிப்பை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா எதிர்க்கொள்கிறாரா ? இவர் 1994 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களிலும் ஏதாவதொரு வழியில் அமைச்சு பதவிகளை வகித்துள்ளார் என குறிப்பிடுகிறார்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் உண்ண உணவில்லாமல்,வாழ வழியில்லாமல் சாதாரண மக்களே உள்ளார்கள். தவறான பொருளாதார கொள்கைகளை செயற்படுத்தியவர்களுக்கு எவ்வித பாதிப்புமில்லை.

இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்களை அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் புறக்கணிக்க வேண்டும்.

தேசிய மட்டத்திலான தொழிற்றுறைகள்

நாட்டை சீரழித்தவர்களால் நாட்டை சீர் செய்ய முடியாது. பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டு விட்டதாக அதிபர் குறிப்பிடுகிறார்.

தொழிற்றுறை வீழ்ச்சியை எவ்வாறு பொருளாதார மீட்சி என்பது:அனுரகுமார கேள்வி | Sri Lanka Economic Anura Kumara Dissanayake

ஆனால் அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கையினால் கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 1183 சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஏலத்தில் விடப்பட்டுள்ளன.

தேசிய மட்டத்திலான தொழிற்றுறைகள் முழுமையாக இல்லாதொழிந்துள்ளன. இதனை எவ்வாறு பொருளாதார மீட்சி என்று குறிப்பிட முடியும்.

கடந்த அரசாங்கம் பொருளாதார ரீதியில் எடுத்த தவறான தீர்மானங்களினால் சிறு மற்றும் கைத்தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆகவே வீழ்ச்சியடைந்துள்ள தொழிற்றுறையை மேம்படுத்த என்ன திட்டங்கள் எடுக்கப்பட்டுள்ளன.” என கேள்வியெழுப்பியுள்ளார்.

ஹமாஸ் 12 முறை சுட்டும் உயிர் தப்பிய இஸ்ரேலிய பெண் இராணுவ அதிகாரி

ஹமாஸ் 12 முறை சுட்டும் உயிர் தப்பிய இஸ்ரேலிய பெண் இராணுவ அதிகாரி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். 


ReeCha
மரண அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு, London, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

15 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், London, United Kingdom

06 Dec, 2024
மரண அறிவித்தல்

செட்டிகுளம், London, United Kingdom

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, புளியங்குளம், பண்டாரிக்குளம்

25 Nov, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, Ajax, Canada

25 Nov, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, பரிஸ், France, கனடா, Canada

26 Nov, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, அல்லாரை

22 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025