இலங்கை மீள்வது எளிதல்ல..! தலைமுறை கூட ஆகலாம் - ரொஹான் பெத்தியகொட
இலங்கை எதிர்வரும் காலங்களில் மீண்டும் மீண்டும் திவாலாகிவிடக்கூடும் என சிங்கள கல்வியியலாளரான கலாநிதி ரொஹான் பெத்தியகொட தெரிவித்துள்ளார்.
ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் 48ஆவது பட்டமளிப்பு நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். மேலும் உரையாற்றிய அவர்,
பொருளாதார நெருக்கடி

''இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியிலிருந்து மீள்வது எளிதல்ல. ஓரிரு வருடங்களில் இந்தப் பிரச்சினை முடிந்துவிடப் போவதில்லை.
இதற்கு பத்து அல்லது இருபது வருடங்கள் அல்லது ஒரு தலைமுறை ஆகலாம்.
ஆனால், இலங்கையின் பொருளாதார நெருக்கடி பலரும் வாதிடுவதைப் போன்று சிம்பாப்வேயைப் போல இருக்காது. பலமுறை திவாலாகிவிட்டதாக அறிவித்த ஆர்ஜென்டினாவைப் போல் இருக்கும்.
ஆர்ஜென்டினா

கடந்த 20 ஆண்டுகளில், ஆர்ஜென்டினா ஒரு முறை அல்ல, ஒன்பது முறை திவால் என்று அறிவித்தருந்தது.
100 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்ஜென்டினா உலகின் 15ஆவது பணக்கார நாடாக இருந்தது.
சராசரியாக, ஆர்ஜென்டினியர்கள் இத்தாலியர்கள், பிரான்ஸ் மற்றும் ஐரிஷ் மக்களை விட பணக்காரர்களாக இருந்தனர். இன்று அது உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும்.
எல்லாவற்றுக்கும் காரணம் அரசியல் சித்தாந்தத்தில் பொது அறிவு இல்லாமையே” - என்றார்.