மீண்டுமொரு கறுப்பு ஜூலை: கொதி நிலையில் மக்கள்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Sri Lankan protests Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Sri Lankan political crisis
By Kiruththikan Jun 29, 2022 05:12 AM GMT
Report

கறுப்பு ஜூலை

பொறுமையிழந்துள்ள மக்கள் எடுக்கும் தீர்மானங்களால் மீண்டுமொரு கருப்பு ஜூலை பதிவாகக் கூடிய வாய்ப்பு காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ச நாட்டின் சாபமாவார், அவர் பதவி விலகினால் மாத்திரமே நாட்டுக்கு விடுக்கப்பட்டுள்ள சாபம் நீங்கும் எனவும் குறிப்பிட்டார்.

சர்வகட்சி அரசாங்கம் வேண்டும்

மீண்டுமொரு கறுப்பு ஜூலை: கொதி நிலையில் மக்கள்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Sri Lanka Economic Crisis Warning Protest

தற்போது கிணற்றுக்குள் வசிப்பது எவ்வாறு என்பதை அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கிறது. ஆனால் மக்களின் தேவை அதுவல்ல.

கிணற்றுக்குள்ளிலிருந்து வெளியேற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

அதற்கு கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் பதவி விலகி தேர்தலை நடத்த வேண்டும், அவ்வாறில்லை எனில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஆட்சியாளர்கள் மீது கடும் கோபத்தில் மக்கள்

மீண்டுமொரு கறுப்பு ஜூலை: கொதி நிலையில் மக்கள்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Sri Lanka Economic Crisis Warning Protest

ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்று ஒன்றரை மாதங்கள் கடந்துள்ள போதிலும் , எவ்வித சர்வதேச உதவிகளும் கிடைக்கப் பெறவில்லை.

மக்கள் பொறுமையிழந்துள்ளனர். மதத் தலைவர்களுக்கு கூட கட்டுப்படும் நிலைமையில் அவர்கள் இல்லை.

ஆட்சியாளர்கள் மீது கடும் கோபத்திலுள்ளனர். மக்கள் அடுத்து என்ன தீர்மானத்தை எடுப்பார்கள் என்று கூற முடியாது.

அடுத்த மாதம் கருப்பு ஜூலையாக பதிவாகக் கூடிய நிலைமையே காணப்படுகிறது. இதற்கு இடமளித்து விட வேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

ராஜபக்சக்களுக்கு கடும் தண்டனை

மீண்டுமொரு கறுப்பு ஜூலை: கொதி நிலையில் மக்கள்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Sri Lanka Economic Crisis Warning Protest

நாட்டை இவ்வாறு வங்குரோத்தடையச் செய்த ராஜபக்சக்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.

ஆனால் ரணில் விக்ரமசிங்க அதனை செய்ய மாட்டார். மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களிலிருந்தும் கூட இந்த அரசாங்கம் பாடத்தைக் கற்றுக் கொள்ளவில்லை.

இந்த ஆட்சியாளர்களை பதவி விலக்குவதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

மத்திய கிழக்கு நாடுகள் இலங்கையுடனான நட்புறவில் இல்லை. அதனை மீண்டும் புதுபிக்க வேண்டும். அதற்கான இயலுமை இந்த அரசாங்கத்திடமில்லை என்றார்.

மீண்டுமொரு கறுப்பு ஜூலை: கொதி நிலையில் மக்கள்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Sri Lanka Economic Crisis Warning Protest

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025