மக்கள் மரணத்தின் வாசலுக்கு செல்லக்காரணமான கோட்டாபய– ரணில் உடனடியாக பதவி விலக வேண்டும்!

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lanka SL Protest
By Kalaimathy Jul 08, 2022 07:22 AM GMT
Report

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மக்கள் வாழ வழியின்றி மரணத்தின் வாசலுக்கு சென்று கொண்டிருக்கின்றார்கள். மக்கள் வாழ வழி செய்ய முடியாத கோட்டாபய– ரணில் அரசாங்கம் வீட்டுக்குப் போகவேண்டும் என சமூக நீதிக்கான அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

மேலும் மக்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு உடனடியாக அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வவுனியா மாவட்ட சமுக நீதிக்கான வெகுஜன அமைப்பு சார்பாக அதன் செயலாளர் சு.டோன்பொஸ்கோ தனது பத்திரிகை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

தடையற்ற இறக்குமதியும், தேசிய பொருளாதாரம் சீர்குலைக்கப்பட்டமையும், தேசிய இனப் பிரச்சினை தீர்க்கப்படாமல் யுத்தமாக்கப்பட்டமையும், ஊழல் நிறைந்த நிர்வாகமும் நாட்டின் பொருளாதாரத்தை அதள பாதாளத்திற்கு தள்ளியுள்ளது.

நீண்ட வரிசையில் மக்கள்

மக்கள் மரணத்தின் வாசலுக்கு செல்லக்காரணமான  கோட்டாபய– ரணில் உடனடியாக பதவி விலக வேண்டும்! | Sri Lanka Economic Peoples Government Gotabaya

அரிசி, மா, சீனி, பருப்பு முதலான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையுயர்வு, தட்டுப்பாடு காரணமாக மக்கள் நீண்ட வரிசையில் நிற்கிறார்கள். அன்றாட வேலையில் ஈடுபடுவோர் தொழில் வாய்ப்பின்றி வாழ முடியாது தவிக்கின்றார்கள்.

பட்டினி நிலை காரணமாக குடும்பமாக தற்கொலை கூட செய்கின்றார்கள். பெற்றோல், டீசல் மண்ணெண்ணெய் சமையல் எரிவாயு முதலியவற்றின் தட்டுப்பாடு, பதுக்கல் காரணமாக போக்குவரத்து, மீன்பிடி கைத்தொழில், அன்றாட கருமங்கள் மாத்திரமின்றி சமையல் கூட செய்யமுடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

வரிசை உயிரிழப்புகள்

மக்கள் மரணத்தின் வாசலுக்கு செல்லக்காரணமான  கோட்டாபய– ரணில் உடனடியாக பதவி விலக வேண்டும்! | Sri Lanka Economic Peoples Government Gotabaya

எரிபொருள் வரிசையில் காத்து நின்ற சுமார் 20 பேர் மரணமடைந்துள்ளனர். வயோதிபர்,  ஊனமுற்றோர், பெண்கள் வரிசையில் காத்திருக்க முடியாது பெருந்துன்பத்திற்கு உள்ளாகின்றனர்.

வரிசையில் குழந்தையை பிரசவிக்க வேண்டிய துன்பநிலை ஏற்பட்டுள்ளது. பொருட்களுக்கான விநியோகத்தில் எவ்வித பங்கீட்டு முறையும் இல்லாததால் வலியோர் வாழவும், எளியோர் சாகவும் கருப்புச் சந்தை பெருகவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் மருந்துப் பொருட்கள் இன்மையால் இலவச மருத்துவம் கல்வி என்பனவும் மக்களுக்கு கிடைக்காமல் போயுள்ளன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை ஒழுங்கமைக்க முடியாத அரசாங்கம் பதவி விலக வேண்டும் எனும் நாடு தழுவிய மக்களின் கோரிக்கையோடு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கைகோர்த்து நிற்கின்றது.

தோட்டம் அமைத்தல்

மக்கள் மரணத்தின் வாசலுக்கு செல்லக்காரணமான  கோட்டாபய– ரணில் உடனடியாக பதவி விலக வேண்டும்! | Sri Lanka Economic Peoples Government Gotabaya

நாட்டு மக்களின் பிரச்சினையைத் தீர்க்க தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும், தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்கவும் ஊழலை ஒழிக்கவும் கூடிய அரசாங்கமொன்றை ஏற்படுத்த மக்கள் தங்கள் கரங்களை இறுக கோர்த்துக் கொள்வதோடு தம் சுய பொருளாதாரத்தை மேம்படுத்த குடும்ப சமூக தோட்டங்களை அமைக்கவும் சக மனிதருக்கு உதவும் மன நிலையை வளர்த்துக் கொள்ளவும் இவ்வேளையில் திடசங்கற்பம் கொள்ளவேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறது.

மேலும் இப்பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரி கவனயீர்ப்பு போராட்டம் நாளை சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு பழைய பஸ் நிலையத்தில் நடைபெற இருக்கின்றது. இப்போராட்டத்தை வலுவூட்ட இனமத, பேதங்களை கடந்து போராட்டத்தை வலுப்படுத்துமாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Herne, Germany

17 May, 2024
நன்றி நவிலல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், உருத்திரபுரம்

21 Apr, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு, வவுனிக்குளம்

19 May, 2014
மரண அறிவித்தல்

கரவெட்டி, திருகோணமலை, கல்முனை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு

15 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கொழும்பு, மெல்போன், Australia

18 May, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஒட்டுசுட்டான், Oshawa, Canada

17 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Dortmund, Germany

14 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கோப்பாய் வடக்கு, கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை, London, United Kingdom

11 Jun, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Brampton, Canada

22 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், London, United Kingdom

18 May, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம், சென்னை, India

10 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாவிட்டபுரம், மட்டுவில், கொழும்பு, Stouffville, Canada

17 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி மேற்கு

15 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி கிழக்கு

20 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

ஊரெழு, கோப்பாய், கொழும்பு

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2014
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

17 May, 2018
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

14 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Paris, France

14 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சூராவத்தை

15 May, 2014
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024