இந்தியாவின் பொருளாதார ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் சிறிலங்கா அரசாங்கம்
இந்தியாவின் நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் மற்றும்சிறிலங்கா உயர்ஸ்தானிகர் ஆகியோர் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினர்.
இந்தியாவுக்கான சிறிலங்கா உயர் ஸ்தானிகர் ஸ்ரீ மிலிந்த மொரகொடா (Milinda Moragoda), இந்தியாவின் நிதி மற்றும் பெரு நிறுவன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமனை (Nirmala Sitharaman) அண்மையில் புதுடில்லியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையேயான தற்போதுள்ள பொருளாதார ஒத்துழைப்புத் திட்டங்களை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
'இந்தியாவில் சிறிலங்கா இராஜதந்திர பணிகளுக்கான ஒருங்கிணைந்த நாடு மூலோபாயம் 2021 - 2023' என்ற தனது கொள்கை வரைபடத்தின் பிரதியை ஸ்ரீமதி நிர்மலா சீதாராமனனிடம் மொரகொட வழங்கி வைத்தார்.
இந்நிலையில் இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகளையும் வழிமுறைகளையும் மிலிந்த மொரகொட கேட்டறிந்து கொண்டுள்ளார். இலங்கைக்கான தனது விஜயங்களை நினைவு கூர்ந்த அமைச்சர் சீதாராமன் உயர்ஸ்தானிகர் மொரகொடவை வரவேற்றார்.
தனது பொருளாதார ஒத்துழைப்புத் திட்டங்களின் மூலம் ஸ்ரீலங்காவிற்கு பல்வேறு துறைகளில் வழங்கிய ஆதரவிற்காக உயர்ஸ்தானிகர் மொரகொட நன்றிகளைத் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்புத் திட்டங்களை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
You may like this

