22 மாதங்களில் அதிவேக நெடுஞ்சாலை மூலம் கொட்டிய வருமானம்!
நாட்டின் அதிவேக நெடுஞ்சாலைக் கட்டமைப்பிலிருந்து 27,581.40 மில்லியன் ரூபாய் மொத்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
2025 ஜனவரி மாதம் முதல் 2026 ஒக்டோபர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இன்று (28) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.
ஈட்டப்பட்டுள்ள வருமானம்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கொட்டாவையிலிருந்து மத்தள வரை செல்லும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து குறித்த காலப்பகுதியில் 11,486 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
அத்துடன், மீரிகமையிலிருந்து குருநாகல் வரை செல்லும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து 7,282 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

பேலியகொடையிலிருந்து கட்டுநாயக்க வரை செல்லும் அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து குறித்த காலப்பகுதியில் 2,560.05 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இந்த மூன்று அதிவேக நெடுஞ்சாலைகளிலிருந்து மாத்திரம் ஈட்டப்பட்டுள்ள மொத்த வருமானம் 21,328.05 மில்லியன் ரூபாயாகும். இதற்கு மேலதிகமாக, வெளிச் சுற்றுவட்ட நெடுஞ்சாலையிலிருந்து குறித்த காலப்பகுதியில் 6,251 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
2025 ஜனவரி மாதம் முதல் 2026 ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டின் அதிவேக நெடுஞ்சாலைக் கட்டமைப்பிலிருந்து ஈட்டப்பட்டுள்ள மொத்த வருமானம் 27,581.40 மில்லியன் ரூபாய் ஆகும்” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |