புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் தரையிறக்கப்பட்ட சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானம்
SriLankan Airlines
Bandaranaike International Airport
Sri Lankan Peoples
Saudi Arabia
By Dhilak
கொழும்பில் இருந்து ரியாத் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டுள்ளது.
தொழிநுட்ப கோளாறு காணரமாக UL 265 என்ற விமானம் இவ்வாறு மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கே தரையிறக்கப்பட்டதாக சிறிலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
அதன் படி, இன்று (10) இரவு 7 மணியளவில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் நிலைமை
இந்த நிலையில், அனைத்து பயணிகளுக்கும் ஹோட்டல் தங்குமிட வசதியும், அடுத்த விமானத்திற்கான இருக்கைகள் மீண்டும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்