இலங்கையின் நிலை - வெளிவந்த அதிர்ச்சிகர ஆய்வு முடிவு
இலங்கை மக்களில் சுமார் 5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் மனிதாபிமான உதவிகளை எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சிலுவை சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி, இலங்கையின் தற்போதைய நிலை காரணமாக 96 வீதமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை சேவைகள் சீர்குலைவு
இலங்கையில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு உடனடி மனிதாபிமான உதவி வழங்குவதோடு அமைப்புகள், சேவைகள் மற்றும் வசதிகளின் பலவீனத்தை நிவர்த்தி செய்வதற்கான தலையீடுகள் மேற்கொள்ளப்படாவிட்டால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சிலுவை சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியின் காரணமாக உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், மருத்துவமனை மகப்பேறு பராமரிப்பு மற்றும் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகள் உட்பட கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை சேவைகளின் அணுகல் மற்றும் கிடைப்பது சீர்குலைந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் நிலை
இலங்கையின் நிலை காரணமாக பாதிக்கப்பட்டு இருப்பவர்களை மீட்டெடுக்காவிட்டால் அவர்களது வறுமை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சிலுவை சங்கங்களின் கூட்டமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 9 மணி நேரம் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
4 நாட்கள் முன்