இலங்கையின் வெளிநாட்டு கடன் தொடர்பில் ஐ.எம்.எப் இன் நிலைப்பாடு : சம்பிக்க எச்சரிக்கை

International Monetary Fund Champika Ranawaka Sri Lanka Economic Crisis Sri Lanka
By Beulah Sep 30, 2023 12:50 AM GMT
Report

வெளிநாட்டு கடன்களை செலுத்துவதற்கு அரசாங்கத்திடம் முறையான திட்டமிடல் இல்லை என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளதை அரசாங்கம் கவனத்திற் கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் குடியரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கடன் பெறுவதே பிரதான பொருளாதார கொள்கை : அரசாங்கத்தை கடுமையாக சாடும் கம்மன்பில

கடன் பெறுவதே பிரதான பொருளாதார கொள்கை : அரசாங்கத்தை கடுமையாக சாடும் கம்மன்பில

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள்

“செப்டெம்பர் 27 ஆம் திகதி இலங்கைக்கு தீர்மானமிக்கது என்பதை ஆரம்பத்தில் குறிப்பிட்டேன்.வங்குரோத்து நிலையடைந்துள்ளதால் இந்த பாதையில் செல்லுங்கள் என சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழி காண்பித்துள்ளது.

இலங்கையின் வெளிநாட்டு கடன் தொடர்பில் ஐ.எம்.எப் இன் நிலைப்பாடு : சம்பிக்க எச்சரிக்கை | Sri Lanka Foreign Loans Imf Chapika Ranawaka

அரசாங்கமும் அந்த பாதையில் செல்கிறது. ஏற்றுக்கொண்ட நிபந்தனைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தினால்தான் நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட நீடிக்கப்பட்ட நிதியுதவி கிடைக்கப்பெறும்.

முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை இலங்கை முழுமையாக செயற்படுத்தவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள். ஆகவே இரண்டாம் தவணை நிதியுதவி கிடைப்பனவு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவம் : தீவிரமடையும் மூளைசாலிகள் வெளியேற்றம்

அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவம் : தீவிரமடையும் மூளைசாலிகள் வெளியேற்றம்

வெளிநாட்டு கடன்கள் மற்றும் வட்டி செலுத்தல் 2022.04.12 ஆம் திகதியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.கடன் செலுத்த முடியாத காரணத்தால் இலங்கை வங்குரோத்து நிலை அடைந்து விட்டது என மத்திய வங்கி உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது.

பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கு உலக நாடுகள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க இணங்கியுள்ளதாக அதிபர் குறிப்பிடுகிறார்.

ஆனால் நடைமுறையில் எந்த முன்னேற்றமும் இதுவரை ஏற்படவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டு இலங்கை எப்போது பெற்றுக்கொண்ட கடனை மீள செலுத்தும் என பிரதான நிலை கடன் வழங்குநர்கள் காத்துக் கொண்டுள்ளார்கள்.

மீண்டும் ஓர் பொருளாதார நெருக்கடி

இதுவே உண்மை. வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்தும் வழிமுறையை இலங்கை இதுவரை அறிவிக்கவில்லை அது பாரிய பிரச்சினைக்குரியது என நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கையின் வெளிநாட்டு கடன் தொடர்பில் ஐ.எம்.எப் இன் நிலைப்பாடு : சம்பிக்க எச்சரிக்கை | Sri Lanka Foreign Loans Imf Chapika Ranawaka

அரச வருமானத்தை அதிகரிக்குமாறு நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.வருமானத்தை எவ்வாறு அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பதை நாணய நிதியம் குறிப்பிடாது.அரசாங்கமே அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

குறுகிய காலத்துக்குள் அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ளாவிட்டால் அரச சேவையாளர்களுக்கான சம்பளம் வழங்கல்,இலவச கல்வி, இலவச மருத்துவம், நலன்புரி சேவைகள் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு பாதிக்கப்படும்.

குறுகிய காலத்தில் உலக சாதனை படைக்கத் தயாராகும் ரணில் - சர்வதேச ஊடகங்கள் தகவல்!

குறுகிய காலத்தில் உலக சாதனை படைக்கத் தயாராகும் ரணில் - சர்வதேச ஊடகங்கள் தகவல்!

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை நிதியை பெற்றுக்கொண்டதன் பின்னர் எதிர்பார்க்கப்பட்ட 15 சதவீத அரச வருமான இலக்கை அரசாங்கம் அடையவில்லை.

எரிபொருள், எரிவாயு உட்பட மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தடையின்றி கிடைக்கப்பெறுகிறது, நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது.

ஆனால் சர்வதேச நாணய நிதியம் இவை தற்காலிக தீர்வே தவிர நிலையானதல்ல, நாடு வெகுவிரைவில் மீண்டும் நெருக்கடிக்குள்ளாகும் என்று நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் தேசிய மட்டத்தில் பாரிய முரண்பாடுகள் தோற்றம் பெறும்.” என்றார்.  

ஐயாயிரம் ரூபா வழங்குவதால் நாட்டை முன்னேற்ற முடியாது- அரசாங்கத்திற்கு விமல் அறிவுரை!

ஐயாயிரம் ரூபா வழங்குவதால் நாட்டை முன்னேற்ற முடியாது- அரசாங்கத்திற்கு விமல் அறிவுரை!

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024