பாகிஸ்தான் இராணுவத் தளபதியைக் கொல்ல இஸ்ரேல் சதித்திட்டம்...! வெடித்த சர்ச்சை

Pakistan Israel World
By Shalini Balachandran Jun 25, 2026 09:36 PM GMT
Report

ஈரான் போர் குறித்த பேச்சுவார்த்தையின் போது, பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் அந்நாட்டின் தூதுக்குழுவினரைக் கொல்ல இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் சதித்திட்டம் தீட்டியதாக பிரேசில் தெரிவித்துள்ளது.

பிரேசில் நாட்டுப் பத்திரிகையாளரும் புவிசார் அரசியல் நிபுணருமான பெப்பே எஸ்கோபர் (Pepe Escobar) இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் போர்ப் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் மத்தியஸ்தராகப் பாகிஸ்தான் செயல்பட்டது.

ட்ரம்பிற்கு எதிராக சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு!

ட்ரம்பிற்கு எதிராக சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு!

புரிந்துணர்வு ஒப்பந்தம்

கத்தாருடன் பாகிஸ்தானும் இணைந்து நடத்திய இந்தப் பேச்சுவார்த்தை விரைவிலேயே சுமுகத்தை எட்டிய நிலையில் இதன் மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கப் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் மற்றும் அவரது குழுவினர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா (Geneva) நகருக்குச் சென்றிருந்தனர்.

பாகிஸ்தான் இராணுவத் தளபதியைக் கொல்ல இஸ்ரேல் சதித்திட்டம்...! வெடித்த சர்ச்சை | Mossad Plotted To Kill Asim Munir Claims

அப்போது அவர்களைக் கொலை செய்ய இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட், சதித்திட்டம் தீட்டியதாகப் பெப்பே எஸ்கோபர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நேரடி உத்தரவின் பேரில் மொசாட், இந்தச் சதித்திட்டத்தைத் தீட்டியதாகவும் அமெரிக்கா-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையில் இஸ்ரேலுக்கு இடம் தராததால் ஏற்பட்ட அதிருப்தியே இதற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாய்வான் விவகாரத்தில் அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனாவின் அச்சுறுத்தல்!

தாய்வான் விவகாரத்தில் அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனாவின் அச்சுறுத்தல்!

அதிகாரப்பூர்வ உண்மை

இருப்பினும் பாகிஸ்தானின் இராணுவ உளவுத்துறை இந்தச் சதித்திட்டம் குறித்த மிகவும் நம்பகமான உளவுத் தகவல்களை முன்கூட்டியே கண்டறிந்ததாகவும் அதைத் தொடர்ந்து ஓமன் (Oman) நாட்டின் தூதர்கள் மூலம் இஸ்ரேலுக்குப் பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த எச்சரிக்கையில், எங்கள் தூதுக்குழுவினர் மீது நீங்கள் (இஸ்ரேல்) கைவைத்தால் இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்தே முற்றிலும் அழித்துவிடுவோம் எனப் பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டதாகப் பெப்பே எஸ்கோபர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் இராணுவத் தளபதியைக் கொல்ல இஸ்ரேல் சதித்திட்டம்...! வெடித்த சர்ச்சை | Mossad Plotted To Kill Asim Munir Claims

இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாகிஸ்தான் ஓர் அணுஆயுத நாடு என்பதால் மேலும் இந்தத் தகவல் சர்வதேச அளவில் விவாதப் பொருளானது.

எனினும் இதில் எந்தவொரு அதிகாரப்பூர்வ உண்மையும் இல்லை எனவும் இது ஒரு பிரேசிலிய பத்திரிகையாளரால் தனிப்பட்ட முறையில் எழுப்பப்பட்ட பரபரப்பான குற்றச்சாட்டாகக் கருதப்படும் நிலையில் இந்தச் சதித்திட்டம் அல்லது எச்சரிக்கை குறித்துப் பாகிஸ்தான் அரசோ அதன் ராணுவமோ அல்லது இஸ்ரேல் அரசோ இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெனிசுலாவுக்கு உதவக் களமிறங்கிய ஐரோப்பிய ஒன்றியம்...!

வெனிசுலாவுக்கு உதவக் களமிறங்கிய ஐரோப்பிய ஒன்றியம்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026