சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய குழு கூட்டம் இன்று
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (Sri Lanka Freedom Party) விசேட மத்திய குழுக் கூட்டமும் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டமும் இடம்பெற உள்ளது.
கொழும்பு (Colombo) டாலி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று பிற்பகல் 02.00 மணிக்கு இந்தக் கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண (Lasantha Alagiyawanna) தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் முதலாவது பொதுக்கூட்டம் எதிர்வரும் 8ஆம் திகதி ஹம்பாந்தோட்டை(Hambantota) யில் நடைபெறவுள்ளதாகவும், இன்று நடைபெறும் மத்திய குழுக் கூட்டத்தில் அது குறித்து ஆராயப்படும் எனவும் அழகியவண்ண மேலும் தெரிவித்தார்.
மத்திய குழு கூட்டம்
எவ்வாறாயினும், நீதிமன்ற உத்தரவு காரணமாக தலைவர் பதவியை இழந்துள்ள முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena), இன்றைய மத்திய குழு கூட்டம் சட்டபூர்வமானது அல்ல என தெரிவித்துள்ளார்.
கட்சியின் சிறுபான்மையினரால் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய குழு கூட்டத்தை அழைப்பதற்கு அவர்களுக்கு அதிகாரம் இல்லை எனவும் முன்னாள் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவேட்பாளர் சர்ச்சை : யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பின்னணியில் அரசியல் : கோவிந்தன் கருணாகரம் விசனம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |