தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கும் முடிவு: மேலும் 3 அமைப்புகள் பூரண ஆதரவு
சிறிலங்காவின் அதிபர் தேர்தலில்( Presidential election)தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கும் முடிவுக்கு மேலும் மூன்று அமைப்புகள் பூரண ஆதரவு தெரிவித்துள்ளன.
அதன்படி சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றம், சாவகச்சேரி கூட்டுறவு சபை மற்றும் யாழ் மாவட்ட பாரவூர்திகள் சங்கம் ஆகிய மூன்று பொதுஅமைப்புகள் தமது பூரண ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளன.
சிவில் சமூக கூட்டிணைவு செயற்பாட்டாளர்கள் இது தொடர்பான சந்திப்புக்களை நடத்தி வருகின்றனர்.
பொதுவேட்பாளர் சர்ச்சை : யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பின்னணியில் அரசியல் : கோவிந்தன் கருணாகரம் விசனம்
பூரண ஆதரவு
நேற்று (31.05.2024) குறித்த அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் உறுப்பினர்களுடனான நேரடி சந்திப்பும் கலந்துரையாடலும் அந்தந்த அமைப்புகளின் அலுவலகங்களில் இடம்பெற்றன.
சாவகச்சேரியிலும், கோண்டாவிலிலும் இடம்பெற்ற மேற்படி சந்திப்புக்களில் தமிழ் பொது வேட்பாளருக்கு தமது பூரண ஆதரவை வழங்கியுள்ளன.
அத்துடன் அந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் குறித்த விடயம் வெற்றிபெற தாம் பூரண ஒத்துழைப்புகளை வழங்க தயாராக உள்ளதாகவும் சந்திப்பில் கலந்து கொண்ட சிவில் சமூக பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்களிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |