காலிமுகத்திடல் போராட்டத்திற்கு பெரும் பங்காற்றிய தமிழர் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை!
தென்னிலங்கை போராட்டங்களுக்கு பெரும் பங்காற்றிய மெல்வா குழுமத்தின் தலைவர் தொடர்பில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, போராட்டத்திற்கு பெருமளவு பணம் செலவழித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மெல்வா குழுமத்தின் தலைவர் ஆனந்தராஜா பிள்ளை கைது செய்யப்படாதது தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுத்துள்ளன.
சம்பிக்க ரணவக்கவிற்கு நெருக்கமாக செயற்பட்ட நபர்
இவ்வாறான நிலையில், அவர் தற்போது இலங்கையில் இருந்து தப்பியோடிவிட்டாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இவர், முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டவர் எனவும் தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் நேரடியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுவதுடன், அதிபர் மாளிகைக்குள் நுழைந்து அதிபரின் படுக்கையில் உறங்கும் புகைப்படங்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலாபம் ஈட்டிக்கொடுத்த பசில்
அத்துடன், அவர் தப்பிச் செல்ல இடம் கொடுத்தமைக்காக பாதுகாப்பு தரப்பினர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவர், முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் நெருங்கிய நண்பர் என குறிப்பிடப்படுகின்றது.
பசில் நிதியமைச்சராக இருந்த காலத்தில் ஆனந்தராஜாவுக்காகவும் ஜெயதேவ நந்தன லொக்குவிதான என்ற முதலீட்டாளரின் இலாபத்திற்காகவும் இறக்குமதி செய்யப்பட்ட இரும்பிற்கு அதிக வரி விதிக்கப்பட்டமை தற்போது தெரியவந்துள்ளது எனவும் செய்தி வெளியாகியுள்ளது.
