கோட்டா கோ கம மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தாமைக்கு காரணம் பாதுகாப்பு செயலரே!
காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் மேல் மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர், பதவியில் இருக்கும் போதே, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதில் அர்த்தமில்லை.
அவரை பதவி நீக்கம் செய்து விசாரணை நடத்த வேண்டும் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
கொழும்பு அலரிமாளிகையில் இருந்து கொழும்பு கோட்டா கோ கமவிற்கு வந்த குண்டர்களை தடுக்க வேண்டாமென பாதுகாப்பு செயலாளரே பணிப்புரை விடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்டவர்கள் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோரே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோட்டா கோ கமவை தாக்கியவர்களை கைது செய்யும் நோக்கில் அடுத்தடுத்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
