மக்களுக்கு தொந்தரவாகவுள்ள அரச தலைவரின் மிரிஹானை இல்லம்!
கோட்டாபய ராஜபக்ச மிரிஹானவில் உள்ள வீட்டில் இருப்பது அக்கம், பக்கம் உள்ளவர்களுக்கு தொந்தரவு என அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
கோட்டாபய அங்கு தங்கி இருப்பதால், அடிக்கடி காவல்துறையினரைக் கொண்டு சோதனைகள் நடத்தப்படுவதால், மக்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நாடு முழுவதிலும் உள்ள அரச தலைவரின் உத்தியோகபூர்வ இல்லங்களில் அரச தலைவர் ஒரு நாள் கூட தங்கியதில்லை எனவும் அவற்றை அவருக்கு நெருக்கமான நபர்கள் மாத்திரமே பயன்படுத்தி வருவதாகவும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
மேலும் 7 முதல் 8 வரையில் உத்தியோகபூர்வ இல்லங்கள் நாடு முழுவதும் உள்ளன. கோட்டாபய மிரிஹானவில் உள்ள தனது சொந்த வீட்டில் தங்கியிருப்பது நல்லது என்றாலும் அவர் அரச தலைவர் இல்லத்திற்கு சென்று குடியேறுவதை நான் விரும்புகிறேன்.
சிறிய வர்த்தகங்களுக்கு இதன் மூலம் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.