அனுர அரசிற்கு எதிராக அமெரிக்காவில் இருந்து காய் நகர்த்தும் ஒரு அரசியல் சதி
அரசாங்கத்திற்கு எதிராகப் பல்வேறு அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்கள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நடவடிக்கைகளுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கி வருபவர், பசில் ராஜபக்சவின் நெருங்கிய நண்பரான முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவிற்குச் சென்றுள்ள பசில் ராஜபக்சவை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், சில தொழிற்சங்கங்களும் பல்வேறு குழுக்களும் இணைந்து அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்திருந்தன.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள்
அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நீதிமன்றத்தினால் வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்ததுடன், அதற்கு இணையாகப் பல்வேறு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இவ்வாறான பின்னணியில், தற்போது மீண்டும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் மற்றும் பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட தரப்பினரால் நடத்தப்பட்ட போராட்டங்கள் ஆகியவை இத்தகைய நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்கவையாக அமைந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |