ஈரான் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிப்போம்: புதிய பிரதமருடன் நெதன்யாகு பேச்சுவார்த்தை
இஸ்ரேலில் தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை அந்நாட்டின் தற்காலிக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், ஈரானிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களை முற்றிலுமாக ஒழிப்பேன் என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.
தனது அரசியல் எதிரியான காடி ஐசன்கோட்டுடன் இணைந்து தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்குவது குறித்து நெதன்யாகு வெளியிட்டுள்ள காணொளி அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐசன்கோட்டுடன் சந்திப்பு
அவர் தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில்,

"இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பது மிகவும் அவசியம் என்ற எனது நம்பிக்கையை, கடந்த வியாழக்கிழமை காடி ஐசன்கோட்டுடன் நடத்திய சந்திப்பு மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இத்தகையதொரு ஒற்றுமை அரசாங்கத்தினால் மட்டுமே ஈரானிய அச்சுறுத்தலை நிரந்தரமாக ஒழிக்க முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |