சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த தொழிற்சங்கங்கள் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சிறிலங்கா அரசாங்கம் தன்னிச்சையான வரி அதிகரிப்பை நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்தே இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.
அதற்கமைய இன்றைய தினம் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பிலும் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.
ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள்
சிறிலங்கா அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக 42 சங்கங்கள் ஒன்றிணைந்து குறித்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளன.
போராட்டத்தில் அரசாங்கத்துக்கு எதிரான கோசங்களை எழுப்பியதுடன், அரசாங்கத்திற்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
எச்சரிக்கை
மேலும் அரசு முன்னெடுக்கப்படும் வரி கொள்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் நிறுத்தப்படாத பட்சத்தில் எதிர்வரும் எட்டாம் திகதியிலிருந்து தொடர் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.











