புதிய அமைச்சரவையில் எந்த பதவியையும் ஏற்கப்போவதில்லை!
sri lanka
government
twitter
sarath weerasekara
cabinet
By Kalaimathy
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு புதிய அமைச்சரவையில் எந்த அமைச்சுப் பதவியையும் ஏற்பதில்லை என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவித்தலை முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தனது கடமையை தொடர்ந்தும் செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமைச்சர் பதவியை ஏற்கப் போவதில்லை என்ற தனது தீர்மானத்தில் உறுதியாக இருப்பதாக முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த இக்கட்டான தருணத்தில் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கம் சிறந்த தெரிவாக இருக்கும் என கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி