புதிதாக திருமணம் செய்வோருக்கு சிறிலங்கா அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
government
land
sri Lanka
By Kalaimathy
காணி ஆணையாளர் நாயகம் மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை குறைந்த வருமானம் பெறும் இளைஞர் யுவதிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை காணி அமைச்சின் செயலாளர் ஆர்.டி.ரணவக்க விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
புதிதாக திருமணமான குறைந்த வருமானம் பெறும் இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு 2000 காணிகளை பகிர்ந்தளிக்க காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அனைத்து பிரதேச செயலகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி