நிறைவேற்றப்பட்டது அநுர அரசின் முதலாவாது வரவு செலவுத் திட்டம்!!
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 45 வாக்குகளும் பதிவாகியுள்ளன.
அதன்படி, 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 114 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வாக்கெடுப்பு
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நிதியமைச்சராக கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி நாடாளுமன்றில் முன்மொழியப்பட்டது.
அதன்படி, வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் 7 நாட்கள் நடைபெற்று, இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பு பெப்ரவரி 25 ஆம் திகதி நடைபெற்றது.
அதில் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 109 வாக்குகளால் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட நிலையில், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்