முக்கிய தரப்பொன்றுக்கான வாகனம்: முடிவை அறிவித்தது அரசாங்கம்
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) உறுதிப்படுத்தியுள்ளார்.
அமைச்சர்வை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தங்கள் அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதி பத்திரங்களை வழங்குவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாகன இறக்குமதி
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தங்கள் கடமைகளைச் செய்ய ஒரு வாகனத்தை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், 5 ஆண்டு பதவிக்காலம் முடிந்ததும், வாகனத்தை திருப்பித் தர வேண்டும் என்றும் அமைச்சர் நளிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஆடம்பரம் இல்லாத வாகனத்தை வழங்குவதற்காக குழுவை உருவாக்க இப்போது நேரமில்லை என்றும் நாட்டின் பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்யும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |